காபூல்: கொடூர தற்கொலை குண்டு தாக்குதலில் 48 மாணவர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், கல்லூரி மாணவர்கள் 48 பேர் கொல்லப்பட்டனர்.
 | 

காபூல்: கொடூர தற்கொலை குண்டு தாக்குதலில் 48 மாணவர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், கல்லூரி மாணவர்கள் 48 பேர் கொல்லப்பட்டனர். 

காபூலின் டஸ்த்-ஈ-பராச்சி என்ற இடத்தில் அமைந்துள்ள மவூத் அகாடெமி என்ற கல்வி நிறுவனத்தில், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்கியிருக்கும் அந்த பகுதியில், மாலை 4.10 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அந்த கல்வி நிறுவனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், அங்கு பயிற்சிக்காக வந்திருந்த 48 மாணவ, மாணவியர் உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷியா பிரிவு இஸ்லாமியர்களை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால், இது நிச்சயம் ஐ.எஸ் தீவிராதிகளின் வேலையாக இருக்கும் என கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP