ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதல்களில் 22 பாதுகாப்பு படையினர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில், பாதுகாப்பு படையினர் 22 பேர் கொல்லப்பட்டனர்.
 | 

ஆப்கானிஸ்தான்: தலிபான் தாக்குதல்களில் 22 பாதுகாப்பு படையினர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெவ்வேறு தாக்குதல்களில், பாதுகாப்பு படையினர் 22 பேர் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானில் அடுத்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஆப்கான் அரசை கவிழ்த்து, இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வர தலிபான் அமைப்பு முயற்சித்து வருகிறது. தேர்தலை புறக்கணிக்க அந்நாட்டு மக்களை தலிபான் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில், ராணுவத்தினர், போலீசார் என 22 பேர் கொல்லப்பட்டனர். மீஸான் பகுதியின் போலீஸ் தலைமை அதிகாரி, தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். அதுபோல, மேற்கு பகுதியில் உள்ள ஃபரா மாகாணத்தில், இரண்டு சோதனை சாவடிகளில், நடைபெற்ற தாக்குதல்களில், 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

11 வீரர்களை தலிபான் அமைப்பு பிடித்து வைத்து அவர்களது ஆயுதங்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இரண்டு இடங்களில் எங்கள் வீரர்கள் நடத்திய தாக்குதல்களில், போலீஸ் தலைமை அதிகாரி மற்றும் 25 ராணுவ வீரர்களை கொலை செய்யப்பட்டுள்ளனர்" என தலிபான் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP