தாய்லாந்து குகையில் இருந்து மேலும் 2 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்து குகையில்Thailand சிக்கியிருந்த சிறுவர்களில் மேலும் 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரையும் மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 | 

தாய்லாந்து குகையில் இருந்து மேலும் 2 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த மேலும் 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரையும்  மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தாய்லாந்தில் தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் அபாயகரமான பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக நேற்று இரவு மீட்டு வந்தனர். மீதம் உள்ள சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் மேலும் 2 சிறுவர்கள் மீடகப்பட்டதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. மிகவும் தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் சென்று ஒவ்வொரு சிறுவனாக அழைத்து நீந்தி, குகைப்பாதையைக் கடந்து அழைத்து வருவதாக தெரிவித்துள்ளது. தற்போது வரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆகும். மிக கடினமான இந்த மீட்புப் பணியில் இங்கிலாந்து முக்குளிக்கும் வீரர்கள், தாய்லாந்து ராணுவம் மற்றும்  உலக நாடுகளின் ஆழ்கடல் தொழில்நுட்ப வீரர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP