இந்தோனேஷியா எண்ணெய் கிணற்றில் தீ: 18 பேர் பலி

இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் உள்ள எண்ணெய் கிணறில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியானார்கள்
 | 

இந்தோனேஷியா எண்ணெய் கிணற்றில் தீ: 18 பேர் பலி

இந்தோனேஷியா எண்ணெய் கிணற்றில் தீ: 18 பேர் பலி

இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் உள்ள எண்ணெய் கிணறில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலியானார்கள்.

இன்று காலை சுமத்திராவின் அருகே உள்ள பஸ்திர் புரி என்ற கிராமத்தில் உள்ள எண்ணெய் கிணறில் கசிவு ஏற்பட்டது. பரவியிருந்த எண்ணெயை நீக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென, தீ பிடித்தது. வேகமாக பரவிய தீ, அருகே இருந்த 5 கட்டிடங்களை உருக்குலைய செய்தது. இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 41 பேர் காயமடைந்தனர். 

தீ தொடர்ந்து எரிந்துகொண்டு இருப்பதாகவும், அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும்,  இந்தோனேஷிய பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP