Logo

115 பேர் காயம்; இணைய சேவைகள் துண்டிப்பு: கலவர பூமியான வங்கதேசம்

வங்கதேசத்தில் மாணவர்கள் செய்த போராட்டம் கலவரமாக மாறியதில் 115 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் பரவுவதை தடுக்க, மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
 | 

கடந்த வாரம், வங்கதேச தலைநகர் தாக்காவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஏற்கனவே, அம்மாநிலத்தில், சாலைகள் ஒழுங்காக இல்லையென பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக தலைநகர் தாக்காவில் போராட்டங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தபோது,  திடீரென கலவரங்கள் வெடித்தன. 

போலீசார் கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரர்களை கலைத்தனர். ஆனால், தாங்கள் நடத்திய அமைதிப் போராட்டத்திற்குள், ஆளும்கட்சி மாணவர்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் புகுந்து கலவரம் செய்ததாகவும், தங்களை அடித்ததாகவும், போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டதில் 115 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், போராட்டம் மேலும் வலுபெற்றுவிடக் கூடாது என்பதற்காக, நாட்டின் முக்கிய பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP