ஜிம்பாப்வே: ஓடும் பேருந்தில் தீ பிடித்தது! 42 உயிரிழப்பு

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லாண்ட்ஸ் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 | 

ஜிம்பாப்வே: ஓடும் பேருந்தில் தீ பிடித்தது! 42 உயிரிழப்பு

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லாண்ட்ஸ் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் வரையில்  உயிரிழந்துள்ளனர். 

ஜிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள முசினா என்ற பகுதியை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்த்து. இதில் சுமார் 70 பேர் பயணித்தனர். இந்த பேருந்து புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP