தேர்தல் 'வெற்றிக் கொண்டாட்டம்'- ஜிம்பாப்வேயில் 3 பேர் பலி

- எதிர்க்கட்சிகளின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
 | 

தேர்தல் 'வெற்றிக் கொண்டாட்டம்'- ஜிம்பாப்வேயில் 3 பேர் பலி

ஜிம்பாப்வேயில் எதிர்க்கட்சிகளின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜிம்பாப்வேயில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒரு பகுதியில் தற்போதைய அதிபர் எமர்சனும், மற்றொரு பகுதியில் எதிர்கட்சி வேட்பாளர் நெல்சன் சமிசா வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டது. இதனால் தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தேர்தலில் வெற்றிப் பெற்றதாக எதிர்க்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியினரைக் கண்டித்து எதிர்கட்சி சார்பில் தலைநகர் ஹராரேயில் பேரணி நடத்தப்பட்டது. இதில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப் பறந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி வெடித்தது. பதவி பறிக்கப்படுகிற நிலை உருவானது. இதையடுத்து அவர் சென்ற நவம்பர் மாத இறுதியில் பதவி விலகினார்.

அவரது வீழ்ச்சியைத் தொடர்ந்து எமர்சன் மனன்கக்வா அதிபர் ஆனார். இந்த நிலையில் அங்கு கடந்த 30ம் தேதி அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP