ஏமன் போர் சூழல்: ஊட்டச்சத்து குறைவால் 5,000 குழந்தைகள் பலி!

ஏமனில் நடந்து வரும் போர் சூழல் காரணமாக கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று அங்கு இயங்கு தொண்டு நிறுவனம் மதிப்பீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 | 

ஏமன் போர் சூழல்: ஊட்டச்சத்து குறைவால் 5,000 குழந்தைகள் பலி!

ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போர் சூழல் காரணமாக கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று அங்கு இயங்கு தொண்டு நிறுவனம் மதிப்பீடு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏமனில் உள் நாட்டுப் போர் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர் இந்த போர் காலங்களில் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம். ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் என்று ஐ.நா. வேதனை தெரிவித்திருந்தது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமனில் அதிகபட்சம் 1400 கோடி மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது. மனிதாபினாமனத்துக்கு எதிரான நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் போரை நிறுத்த ஐ.நா முயற்சித்து வருகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP