இந்தோனேசியாவில் ஆற்று நீரை சுத்தம் செய்ய கேன்களை கட்டி நீந்தும் பெண்கள்

இந்தோனேசியாவில் பெண்கள் காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி நீந்திய வினோதமான முறையில் தண்ணீரை சுத்தம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தினக் கூலி வழங்கப்படுகிறது.
 | 

இந்தோனேசியாவில் ஆற்று நீரை சுத்தம் செய்ய கேன்களை கட்டி நீந்தும் பெண்கள்

இந்தோனேசியாவில் ஆற்று நீரை சுத்தம் செய்ய கேன்களை கட்டி நீந்தும் பெண்கள்இந்தோனேசியாவில் பெண்கள் காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி நீந்திய வினோதமான முறையில் தண்ணீரை சுத்தம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தினக் கூலி வழங்கப்படுகிறது.  

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.  இங்குள்ள மீன் பிடி கிராமத்தில் வாழும் மக்களுக்கு தண்ணீர் கிடைத்தாலும் அது அசுத்தமாக இருந்தது. 

இதனால் அங்குள்ள மன்டர் என்ற ஆற்றில் மாசுபட்டு இருக்கும் குடிநீரை சுத்தப்படுத்த, பெண்கள் காலி கேன்களை இடுப்பில் கட்டிக் கொண்டு தண்ணீரில் நீந்தியபடி குப்பை கூளங்கள் அகற்றப்படுகின்றன. இந்த முறையில் பெண்கள் தலா 200 காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி ஆற்றில் நீந்துகின்றனர்.

தினமும் ஒரு மணி நேரம் 4 கி.மீட்டர் தூரத்துக்கு நீந்தி ஆற்று தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு கேனுக்கு தலா ரூ.450 வீதம் (7 டாலர்) கூலி வழங்கப்படுகிறது. இத்தகைய முறை மூலம் சுத்தம் செய்யப்படும் அந்த தண்ணீர் ஆற்றின் கரையோரம் உள்ள கிணற்றில் சேமித்து பொது மக்களுக்கு வினியோகிக்கிறது அரசு. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP