இந்தோனேசியாவின் அடுத்த அதிபா் யாா்? உலகின் மிகப்பொிய தோ்தல்

ஒரே நாளில் அதிகம் பேர் வாக்களிக்கும் உலகிலேயே மிகப்பெரிய தேர்தலான இந்தோனேசிய அதிபர் தேர்தல் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
 | 

இந்தோனேசியாவின் அடுத்த அதிபா் யாா்? உலகின் மிகப்பொிய தோ்தல்

ஒரே நாளில் அதிகம் பேர் வாக்களிக்கும் உலகிலேயே மிகப்பெரிய தேர்தலான இந்தோனேசிய அதிபர் தேர்தல் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவும், பிராபோவோ சுபியண்டோவும் பிரதான வேட்பாளர்களாக இந்தத் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  அதிபா், துணை அதிபா், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க  ஒரே நாளில் அதிக வாக்காளா்கள் வாக்களிக்கும் உலகின் மிகப்பொிய தோ்தலாகும். 

சுமார் 19 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், எட்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடி மையங்கள், 60 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் என மிக பிரமாண்டமாக இந்தத் தேர்தலானது நடைபெறுகிறது.

இருபது கட்சிகள் போட்டியிடும் நிலையில் மொத்தமாக 2 லட்சத்து 45 ஆயிரம் வேட்பாளர்கள் இதில் களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு கட்சியிலும் 30 சதவிகித பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். 

வாக்காளா்கள், வாக்கு சீட்டில், தாங்கள் விரும்பும் வேட்பாளாின் சின்னத்தில் துளையிட்டு தங்களது வாக்கை செலுத்துவாா்கள் என்றும் வாக்கை செலுத்தியதற்கு ஆதாரமாக தங்களது கைவிரலை மையில் முக்கி எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தோனேசியாவில் அமலில் உள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP