வாட்ஸ் ஆப் செயலி மூலம் லாபம் எதுவும் இல்லை – மார்க் ஜுக்கர்பெர்க்

வாட்ஸ் ஆப் செயலி மூலம் லாபம் எதுவும் சம்பாதிக்கவில்லை எனவும், இதனால் பேஸ்புக்கின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
 | 

வீடியோ கான்பரன்சிங் மூலம் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் மார்க் ஜக்கர்பெர்க் உரையாடினாா். அப்போது பேசிய அவா், சமூக ஊடக செயலிகளை இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்துவதாக தெரிவித்த அவர், இது அமெரிக்க மார்க்கெட்டுக்கு சவால் விடும் வகையில் உள்ளது எனக் கூறினார்.

பிரச்சினைக்குரிய டேட்டாக்களை தாங்கள் சேகரித்து வைப்பது கிடையாது என தெரிவித்த மார்க் ஜக்கர்பெர்க், பல்வேறு நாடுகளின் வலுவில்லாத சட்ட திட்டங்களால் டேட்டாக்கள் திருடப்படுவதாக கூறினார்.

பெரிய நாடுகளில் டேட்டாக்களுக்கு தடை விதிப்பதன் மூலம் தங்களது வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமாக உள்ளதாக கூறிய மார்க் ஜக்கர்பெர்க், தனி நபர் விவரங்களை பாதுகாப்பதற்கு அவரது நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறினார்.

பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகும், அதில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் மார்க் ஜக்கர்பெர்க் தெரிவித்தார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP