எவ்வளவு பெரிய வெடிகுண்டு... பெல்ஜியத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி!

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், 2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சனிக்கிழமையன்று செயலிழக்கச் செய்யப்பட்டது.
 | 

எவ்வளவு பெரிய வெடிகுண்டு... பெல்ஜியத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி!

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டை சனிக்கிழமையன்று செயலிழக்கச் செய்தனர்.

இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 காலகட்டத்தில் நடந்தது. இதில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகள் இணைந்து பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனப் படைகளை தாக்கின. உலகமே ஜெர்மனியின் ஹிட்லர் கைகளுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. 

1945ம் ஆண்டு அதிகமாக ஆட்டம்போட்ட ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இரண்டு நகரங்களை அணு குண்டை வீசி அழித்த பிறகே, ஜப்பான் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தது. அதைத் தொடர்ந்து, ஜெர்மனியும்  தனது தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைய முன்வந்தது. ஜப்பான், ஜெர்மன் நாடுகள் சரணடைந்ததைத் தொடர்ந்த இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் பல லட்சக் கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். பல ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வரவே உலக நாடுகளுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. 

எவ்வளவு பெரிய வெடிகுண்டு... பெல்ஜியத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி!

இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, வெடிகுண்டுகள், போர்க்கப்பல்கள் போன்றவை, அவ்வப்போது பூமிக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. அதில் சில வியக்கத்தக்கவையாகவும் மற்றும் சில மனிதகுலத்துக்கு எதிரான அதிர்சிகர போர் சூழலை நினைவூட்டுவதாகவும் இருக்கின்றன. 

அந்த வகையில், இரண்டம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் நடந்த கட்டுமான பணிகளின் போது, இது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், 100 மீட்டர் சுற்றளவு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர். இதனால் பயணிகளுக்கோ அல்லது விமான சேவைகளிலோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP