40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரிழந்த திமிங்கலம்

பிலிப்பைன்ஸில் உள்ள கம்போஸ்தெலா பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தபோது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், 16 அரிசி சாக்குகள் தேங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 | 

40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரிழந்த திமிங்கலம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வயிற்றுக்குள் தேங்கிய சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளால் திமிங்கலம் ஒன்று உயிரிழந்தது.

பிலிப்பைன்ஸில் உள்ள கம்போஸ்தெலா பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தபோது அதன் வயிற்றுக்குள் சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், 16 அரிசி சாக்குகள் தேங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் தேங்கியதால் முறையாக இரை உண்ண முடியாமல் தவித்துவந்த அந்த திமிங்கலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன் திமிங்கிலத்தின் வாயில் இருந்து அதிக அளவு ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

 இந்நிலையில், பிளாஸ்டிக் குப்பைகளால் திமிங்கலம் உயிரிழந்ததற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP