வீக்லி நியூஸுலகம்: சிரித்த முகம் காணும் ஆடுகள் மற்றும் நீளக் கூந்தல் அழகி!

இந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 | 

வீக்லி நியூஸுலகம்: சிரித்த முகம் காணும் ஆடுகள் மற்றும் நீளக் கூந்தல் அழகி!

தாம்பத்தியம் இல்லாமல் குழந்தைப்பேறு!

வீக்லி நியூஸுலகம்: சிரித்த முகம் காணும் ஆடுகள் மற்றும் நீளக் கூந்தல் அழகி!

இங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் கெர்ரி ஆலன்-அலி தாம்சன்.  இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு உணவகத்தில் சந்தித்து பின்னர் அப்போது முதல் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளாமல் குழந்தை பெறவும் முடிவு செய்தனர்.  ஏனெனில் கெர்ரி ஆலன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். குடும்ப வாழ்வில் அதிகம் கஷ்டப்பட்டதால் திருமண வாழ்வில் அவருக்கு உடன்பாடு இல்லை. அலி தாம்சன் ஓரின சேர்க்கையாளர் என்பதால் திருமணம் செய்ய விரும்பவில்லை.

ஆனால் இவர்களுக்கு குழந்தை பெற ஆசை.  இது குறித்து இணையத்தில் தேடினர். அப்போது தான் 'டர்கி பாஸ்டர்' முறையின் மூலம் குழந்தை பெற முடியும் என தெரியவந்தது. அதன் பின்னர் 3 பவுண்டு (ரூ.300) செலவில் ஊசி ஒன்றை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கினர். அதன் பின்னர் ஊசியில் எடுக்கப்பட்ட அலி தாம்சனின் விந்தணுவை கெர்ரி ஆலனின் கர்ப்பபையில் செலுத்தினர். ஆனால் முதல் நான்கு முறை இதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. 

5-வது முறை செய்தபோது கர்ப்பம் அடைந்தார். அதை தொடர்ந்து கடந்த மே 23-ந்தேதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. எனவே தான் ‘டர்கி பாஸ்டர்’ முறையில் குழந்தை பெற்றனர். இந்த முறையின்படி மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டிலேயே செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தைபெற முடியுமாம். 

நீளக் கூந்தலும் மிளிர் கண்களும்!

வீக்லி நியூஸுலகம்: சிரித்த முகம் காணும் ஆடுகள் மற்றும் நீளக் கூந்தல் அழகி!

இஸ்ரேலில் 5 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பெருக்கடுக்கும் ரசிகர்களை கொண்டுள்ளார். 

இஸ்ரேலைச் சேர்ந்த சிறுமி மியா அவ்லாளோ. இவருடைய நீளமான கூந்தலும், அழகான கண்களும் அவருக்கு இன்னும் அழகை கூட்டுவதாக இவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து சமூக வலைதளத்தில் பின் தொடர்பவர்கள் கூறுகின்றனர். 

இஸ்ரேல் நாட்டின் மிகவும் பிரபலமான முடி ஒப்பனையாளர் சகி தஹரி தான் ஒருமுறை, இங்கிலாந்தின்  புகழ்பெற்ற இதழ் ஒன்றிற்காக சிறுமியை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அன்று முதல் மிகப்பெரிய நட்சத்திரமாக சிறுமி வளம் வருகிறார். 

இதுகுறித்து சகி தஹரி கூறுகையில், மியாவுடன் வேலை செய்வது மிகவும் எளிதானது. பொறுமையாக சிரித்துக்கொண்டே அமர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார். அதே சமயம் தான் மியாவை எப்பொழுதும் "இளவரசி மியா" என்று தான் அழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மியாவின் முடி என்னுடைய முடியை விட அழகாக இருப்பது எனக்கு பெரிய வருத்தத்தை தருகிறது என பெண் ஒருவர் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது போன்று மியாவிற்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்து தெரிவித்தாலும், எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு சிலர் கருத்து பதிவிட்டுள்ளார். சிறுவயதில் குழந்தைகளை விளையாட விட வேண்டும். உங்களுடைய ஆசைக்காக குழந்தையை இப்படி மாடலிங் செய்ய விடக்கூடாது. எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் நான் இப்படி செய்திருக்க மாட்டேன் என சில பெண்கள் இணையத்தில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். 

கேரள வெள்ளப்பெருக்கு: நாசா கூறிய காரணம் தெரியுமா? 

வீக்லி நியூஸுலகம்: சிரித்த முகம் காணும் ஆடுகள் மற்றும் நீளக் கூந்தல் அழகி!

அடித்து ஓய்ந்திருக்கிறது கேரளாவில் கனமழை. இந்த நிலையில்  வெள்ளத்திற்கு முன்பும் பின்பும் கொண்ட தோற்றத்தை நாசா விண்வெளியிலிருந்து படமெடுத்து பகிர்ந்துள்ளது. 

கேரளாவில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை அங்கு தீவிர பேரிடரை ஏற்படுத்தியது. கனமழை மற்றும் வெள்ளத்தினால் 300 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்களின் வீடுகள் நாசமாகியுள்ளன. அம்மாநிலத்தில் மொத்தம் ரூ.20,000 கோடி மதிப்பிலான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

வெள்ளத்திற்கு முன்பும் பின்பும் கேரளாவின் மாநிலத்தின் நிலத்தோற்றத்தை நாசா விண்வெளியிலிருந்து படமெடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. 

பிப்ரவரி 8ஆம் தேதியும் ஆகஸ்ட் 22ஆம் தேதியும் எடுக்கப்பட்ட இரு படங்களை நாசா பகிர்ந்திருக்கிறது. மேலும், ''அணைகள் மிகவும் தாமதமாகத் திறக்கப்பட்டன. அவை திறக்கப்பட்ட சமயத்தில் கனமழையும் வந்துவிட்டதால் வெள்ளம் அதிகமானது'' என்று நாசா விஞ்ஞானி சுஜய் குமார் கேரள பெருவெள்ளத்துக்கு காரணமாக கூறினார். 

சிரித்த முகத்தை விரும்பும் ஆடுகள்  

வீக்லி நியூஸுலகம்: சிரித்த முகம் காணும் ஆடுகள் மற்றும் நீளக் கூந்தல் அழகி!

மனிதன் இன்பத்தில் இருந்தாலும், துன்பத்தில் இருந்தாலும் அவர்களது முகங்களை ஆடுகள்  வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது. அதுவும் மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்களின் படங்களை ஆடுகள் தேடி ஆர்வத்துடன் பார்க்கும் என்றும் வினோதமான தகவலை ஆய்வு கூறுகிறது. 

ஐரோப்பிய மற்றும் பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் ராயல் சொஸைட்டி ஓப்பன் சைன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

''இந்த ஆய்வுக்கு 20 வளர்ப்பு ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிடம் ஒரே மனிதரின் மகிழ்ச்சியான முகம் கொண்ட புகைப்படமும் கோபமான புகைப்படமும் காட்டப்பட்டன. 20 ஆடுகளுமே புன்னகை நிறைந்த முகத்தையே அணுக விரும்பின. தங்கள் மோவாயினால் புகைப்படத்தையும் தொட்டன.

ஆடுகள் அனைத்தும் மகிழ்ச்சியான முகத்தைப் பார்க்கவும் அணுகவும் சராசரியாக 1.4 விநாடிகளை எடுத்துக்கொண்டன. கோபமான முகத்துக்கு 0.9 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொண்டன.

அதாவது ஆடுகள் கோபமான முகத்தை விட மகிழ்ச்சியான முகத்தைப் பார்ப்பதில், 50% அதிகமான நேரத்தைச் செலவழிக்கின்றன. இதன்மூலம் கால்நடை விலங்குகள் தங்கள் சூழலை விளக்கும் நவீன மனதைக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது''.

பறவைகள் ஆயுளுக்கு வெட்டு வைக்கும் ஹார்ன் சத்தம்!

வீக்லி நியூஸுலகம்: சிரித்த முகம் காணும் ஆடுகள் மற்றும் நீளக் கூந்தல் அழகி!

பறவைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவைச் சேர்ந்த பறவையியல் துறை ஆய்வாளர் அட்ரியானா டொராடோ நகரங்களில் வசிக்கும் பறவைகள் குறித்த ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.  இந்த ஆராய்ச்சியில் 263 பறவைகள் தொடர்ந்து 120 நாட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆராய்ச்சி தொடங்கி 21 ஆம் நாளில் இருந்து அவற்றை கண்காணித்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்த சக ஆராய்ச்சியாளர் மருத்துவர் சூ சொலிஞ்சர், "நகரங்களில் வாழும் பறவைகள் நகரங்களில் ஏற்படும் ஒலி  இறைச்சல் காரணமாக மிகவும் பாதிக்கப்படுகின்றன, மேலும், அதீத ஒலியின் காரணமாக பறவைகளின் வாழ்நாள் குறைகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP