Logo

வீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்

இந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 | 

வீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்

சவுதிக்கு விழுந்த பலத்த அடி!

சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாடு அக்டோபர் 25 ஆம் தேதி துவங்கியது. பல மாதங்களாக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. மேற்கத்திய ஊடகங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தான் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டார்.


இதையடுத்து இம்மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பின்வாங்கின. மேற்கத்திய முக்கிய ஊடகங்களான சி.என்.என்., வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட முக்கிய மேற்கத்திய ஊடகங்கள் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன.

மாநாட்டிலும் எதிர்பார்த்த அளவிற்கு முதலீட்டாளர்கள் குவியவில்லை. இது சவுதி அரசுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க--அரபு வர்த்தக அமைப்பு தலைவர் டேவிட் ஹமாத் பேசுகையில், சவுதிக்கு வருவதற்கு மேற்கத்திய நிறுவனங்கள் தயங்குகின்றன. தற்போதைய சூழல் அதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஆனால் சவுதி திறந்த மனதுடன் உள்ளதை காண்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் காத்திருந்து, கண்காணித்து முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். சில நிறுவனங்கள் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளன. சில நிறுவனங்கள் 2ம் நிலை அதிகாரிகளை அனுப்பியுள்ளன.

இன்றுள்ள இறுக்கமான சூழல் மாறி நல்ல தொழில் சூழல் ஏற்படும் என நம்புவோம், என்றார்.

இந்த மாநாட்டில் ஜோர்டான், துபாய், பாகிஸ்தான், பஹ்ரைன், லெபனான், ஆசிய, ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 55 பில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

வீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்

10 லட்சம் கார்களை திரும்ப பெரும் பிஎம்டபிள்யூ

சர்வதேச அளவில், ஆடம்பர சொகுசு கார்கள் உற்பத்தியில் மிகவும் பிரபலமானது பிஎம்டபிள்யூ நிறுவனம். ஜெர்மன் நாட்டு நிறுவனமான பிஎம்டபிள்யூ சொகுசு கார் விற்பனை சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.

ஆடம்பர கார் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் கார்களில் ஒன்றாக திகழும் பிஎம்.டபிள்யூ, சந்தை செய்யப்பட்ட கார்களில் சில கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால், சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) கார்களை  திரும்ப பெற உள்ளதாகவும் அறிவித்துள்ளது.  

வெளியேற்றுதல் கேஸ் சர்குலேஷன் கூலர் என்று கூறப்படும் அமைப்பில் இரசாயான கலவையான கிளைகோல் கூலிங் திரவம்  கசிய வாய்ப்பு உள்ளதாகவும், இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானால் கார்கள் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதாக கூறி, கார்கள் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்களை  பரிசோதிப்பதற்காக,  பாதிப்புக்குள்ளாகியுள்ள கார் உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் விற்பனையாளர்களை தொடர்பு கொண்டுள்ளதாகவும், பிரச்சினைக்குள்ளாகியுள்ள பாகங்கள் பரிசோதிக்கப்பட்டு, கோளாறு இருப்பின், அந்த பாகம் மாற்றி கொடுக்கப்படும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதமும் ஐரோப்பா மற்றும் சில ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 48 ஆயிரம் கார்களை இதே பிரச்சினைக்காக திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்தது. அதேபோல், தென்கொரியாவில் நடப்பாண்டு 30 கார்கள் தீ பிடித்ததற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் மன்னிப்புகோரியது நினைவிருக்கலாம். 

வீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்

40 மாதங்கள் சித்ரவதை அனுபவித்த பத்திரிகையாளர்! 

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது குறித்து பரபரப்பாக பேசிகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடூர அனுபவம் குறித்து தெரியவந்துள்ளது.

ஜப்பானியப் பத்திரிகையாளர் ஜம்பே யசுடாவை 3 ஆண்டுகளுக்கு முன்னர் அல் கொய்தாவின் சிரியா பிரிவு தீவிரவாதிகள் உளவுப் பார்த்தாகக் கூறி கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைத்திருந்தனர்.

சுமார் 40 மாதங்கள் சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த யசோடா கடந்த 2 நாட்களுக்கு முன்  விடுவிக்கப்பட்டார். அலங்கோலமான நிலையில் நேற்று டோக்கியோ திரும்பிய அவர் தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்துள்ளார்.

அவர் கூறுகையில், இட்லிப் என்ற இடத்தில்தான் என்னை அடைத்து வைத்திருந்தனர் என்று நினைக்கிறேன். நான் இருந்த இடத்திலிருந்து எந்தச் சத்தமும் வெளியே கேட்கக் கூடாது. நாள் கணக்கில் குளிக்காததால் என் தலையில் நமைச்சல் எடுக்கும். நான் சொறிந்தால் கூட சத்தம் கேட்கும் என்பதால் அது கூட செய்ய முடியாது. 

மூக்கு வழியாக மூச்சு விடக் கூடாது. வாய் வழியாகவே மூச்சு விட வேண்டும். கேனில் அடைக்கப்பட்ட உணவு என் முன்னால் வைப்பார்கள். ஆனால், அதை நான் உடைத்துச் சாப்பிடக் கூடாது. எந்தச் சத்தம் கேட்டாலும் தாக்குவார்கள். அதனால் 20 நாள்கள் வரை கூட சாப்பிடாமல் இருந்துள்ளேன். 

இறுதியில் என்னை காரில் ஏற்றிக் கொண்டு வந்து துருக்கி எல்லையில் விட்டுச் சென்றனர் என கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஜம்பே யசுடா 2015- ம் ஆண்டு மாயமானார். 

2016- ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி யசுடா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அவ்வப்போது அவரின் வீடியோக்களைத் தீவிரவாதிகள் வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்

மனிதனை க்ளோனிங் செய்ய தயாரான சீனா

சீன ஆய்வகத்தில் 12 வயது ஸ்க்னாசர் என்ற இன நாயின் குட்டிகளை க்ளோனிங் முறையில் செய்து உள்ளது என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செயல்முறை ஸ்க்னாசர் நாயில் இருந்து தோல் மாதிரிகளை எடுத்து மற்றும் செல்கள் க்ளோங்கில் ஈடுபடுத்தப்பட்டது.

நாய் உரிமையாளர் யார் வாங் யிங்கிங் க்ளோனிங் குட்டிகளின் தந்தை படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சீனாவில் முதல் க்ளோங்  செய்யப்பட்ட நாய் 2017 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நடைமுறையில் இருந்து பெரிய சவால்களை கண்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் குளோனிங் தொழில்நுட்பம்  மூலம்  சீன வல்லுநர்கள் ஆய்வகத்தில் நாய்களின் 20 வெவ்வேறு இனங்களைப்  உருவாக்க  சீனா அனுமதி அளித்துள்ளது. ஆனால் க்ளோனிங் அதே டி.என்.ஏயின் விலங்குகளை உற்பத்தி செய்யும்போது அது அதே மனநிலையுடன் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது வளர்ந்து வரும் நிலையில் தான் தெரியும். 

அடுத்த படியாக மனிதர்கள் தான் க்ளோனிங் முறையில் உருவாக்கப்படுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எந்த  சிறப்பியல்புகள் வேண்டும் என  தேர்வு செய்து  குளோனிங் செய்யலாம். இது குறித்து டார்ட்மவுத்திலுள்ள  உயிரியல் நிபுணர் ரொனால்ட் கிரீன் ஏற்கனவே எச்சரித்து இருந்தார்.

ஸ்டெம் செல் சோதனை மூலம் மனித ரத்தத்தில் இருந்து கடந்த மாதம், ஜப்பானிய விஞ்ஞானிகள் மனித முட்டை செல்களை உருவாக்கி இருந்தனர். ஆரம்ப முட்டைகளை மனித குழந்தைகளாக வளர்க்க முடியாது, ஏனென்றால் அவை மிகவும் முதிர்ச்சியற்றவை. ஆனால் சோதனை என்பது நிச்சயமாக மனிதனை குளோனிங் மூலம் உருவாக்குவதின் முதல் அடி இதுவாகும். 

ஸ்டான்போர்டை சேர்ந்த  உயிரியல் நிபுணர் விஞ்ஞானி ஹாங்க் கிரேலி கூறும்போது தோல் செல்களிலிருந்து நாம் மனித முட்டைகள் மற்றும் விந்து உருவாக்க முடியும் என்றால் மனிதர்களை க்ளோனிங் செய்யும் சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளன என கூறியுள்ளார். 

வீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்

எலிக்கு இளமை திரும்ப வைத்த இந்தியர்!

இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஒருவர் வயதான எலியின் தோல் சுருக்கங்கள் மற்றும் முடி உதிர்வை சரிசெய்து இளமைக்கு திரும்ப வைக்கும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கேசவ் சிங் என்ற இந்திய வம்சாவளி மருத்துவர் பணிபுரிகிறார். இவர் வயதான எலி ஒன்றின் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் மற்றும் முடி உதிர்வை சரிசெய்து இளமை தோற்றத்தை உருவாக்கும் வழியை தனது குழுவினருடன் இணைந்து கண்டுபிடித்துள்ளார். 

மிட்டோகோன்ரியல் டிஎன்ஏ ஜீன்களில் மாற்றம் செய்வதால் தோல் சுருக்கத்தை சரிசெய்யவும் உதிர்ந்த முடியை மீண்டும் வளரவைக்கவும் முடியும் என்று அறிந்துள்ளனர். 

வீக்லி நியூஸுலகம்: எலிக்கு இளமை திரும்பவைத்த இந்தியர் மற்றும் சவுதிக்கு சவுக்கடி தந்த மாநாடும்

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP