வீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...

இந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 | 

வீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...

டாய்லெட் பேப்பரில் திருமண ஆடை: வெற்றி பெற்றால் 10 ஆயிரம் டாலர்கள் பரிசு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சீப் சிக் என்ற அமைப்பு ஆண்டு தோறும் டாய்லெட் பேப்பர்களை கொண்டு மணமகள் ஆடையை வடிவமைக்கும் போட்டியை நடத்தி வருகிறது.  சுவாரஸ்மான இந்தப்போட்டிக்கு 1,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. 

இதில் பங்கேற்ற ஆடை வடிமைப்பாளர்கள், டாய்லெட் பேப்பர், ஒட்டும் பசை, குண்டூசி ஆகியவற்றை வைத்து மணமகளுக்கான ஆடைகளை நேர்த்தியாக வடிவமைத்தனர். மேனியோடு ஒட்டிக்கொண்டிருந்த இந்த ஆடைகளை அணிந்தபடி மாடல் அழகிகள் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப்போட்டியில், வெர்ஜிரியாவைச் சேர்ந்த க்ரூஸ் முதல் பரிசை தட்டிச்சென்றார். அவருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். ஜெப்பெசோஸ் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.

தற்போது இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.  மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர். நீண்ட காலம் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பிடித்திருந்தார். தற்போது அவர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...

181 அடி உயரத்தில் திகில் கிளப்பும் கண்ணாடி பாலம்!

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ஃப்யூஸி மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குதிரை கால் தடம் வடிவிலான வட்டவடிவ கண்ணாடி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. 181 அடி உயரமுள்ள இது சீனாவின் 2வது கண்ணாடி பாலமாகும். 

இரண்டு மலைகளுக்கு நடுவில் கட்டப்பட்ட இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து செல்வது என்பது அதீத திகிலூட்டும் அனுபவமாக இருக்கும். குறிப்பாக உயரமான பகுதிகளை கண்டு அஞ்சுபவர்களுக்கு இதில் நடப்பதே பெரிய சவால் தான். 

வீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...

மேஜிக் மூலம் மறைந்து போன இளம்பெண்ணை காணாமல் தவித்த வளர்ப்பு நாய்

இங்கிலாந்தில் மேஜிக் மூலம் மாயமாக மறைந்த இளம்பெண்ணை அவரின் வளர்ப்பு நாய் குழப்பத்துடன் தேடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. லண்டன் ஊல்விச் பகுதியைச் சேர்ந்தவர் ஸான்ட்ரா பீட்டர்சன் (Sandra Pettersen) என்பவர், தான் வளர்த்து வந்த சைபீரியன் ஹஸ்கி வகை நாய் முன் "ஷீட் ட்ரிக்" என்ற மேஜிக் செய்து காட்டினார்.

நாய் முன் பெரிய துண்டை காட்டிய அவர், நொடிப்பொழுதில் மறைவது போல் பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டார். இதனைக் கண்ட ஹஸ்கி, சிறு குழந்தை போல் ஸான்ட்ராவைத் தேடத் தொடங்கியது. நீண்ட நேரத்திற்குப் பின் வந்த ஸான்ட்ராவைப் பார்த்த பின்னரே வளர்ப்புநாய் திருப்தியடைந்தது.

வீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...

மாயமான பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டெடுப்பு!

இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த வியாழக்கிழமை இரவு, காய்கறிகள் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற வா திபா அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த வா தீபாவின் உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காண இயலவில்லை. இறுதியாக தோட்டத்துக்குச் சென்று அவரைத் தேடியபோது, அங்கு 23 அடி கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்திருந்தது. மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்து உள்ளது. 

வீக்லி நியூஸுலகம்: உலக பணக்காரர் முதல் டாய்லெட் பேப்பர் கல்யாண டிரெஸ் வரை...

இதனையடுத்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள், மலைப்பாம்பைக் கொன்று, அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் கிழித்தனர். அப்போது மலைப்பாம்பின் வயிற்றுக்குள் வா திபா சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவருடைய தலையை முதலில் விழுங்கிய பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து உள்ளதாக கிராம மக்கள் கூறினர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP