வீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

இந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 | 

வீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

பணத்துக்கு பதில் சிகரெட் கொடுக்கும் கதியில் வெனிசுலா!

வெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, பண்டமாற்று முறைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் பணமான பொலிவார் (bolivar) மதிப்பிழந்துவிட்டது. பண வீக்கம் காரணமாக அன்றாட செலவுக்குக் கூட மக்களிடம் பணமில்லை.

நகரவாசிகள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் தங்களது நிலைமையை சமாளித்து வருகின்றனர். பெரும்பான்மை மக்களோ, பணத்திற்கு பதில் பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர். வாழைப்பழம், முட்டை, சிகரெட் ஆகியவற்றை பணத்திற்கு பதிலாக கொடுக்கும் நிலையில் அங்கு பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. 

வீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

அமெரிக்கா நீங்களாக ஆசிய கரங்கள் ஓங்குமா?

அமெரிக்காவை தவிர்த்து ஒருங்கிணைந்த வர்த்தக மண்டலத்தை உருவாக்குவதற்கான பணிகளில் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. 

ஆசிய கண்டத்தில் 16 நாடுகள் அடங்கிய மண்டல பொருளாதார கூட்டமைப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டு, வர்த்தகத்தில் இணைந்து செயல்படுவது என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் உச்சகட்ட கூட்டம் மீண்டும் டோக்கியோவில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவைத் தவிர்த்து இந்த 16 நாடுகளும் வர்த்தக ரீதியில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து டோக்கியோவில் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜப்பான் வர்த்தக அமைச்சர் ஹிரோஷிகே செகோ கூறுகையில், ''இந்தாண்டு இறுதியில் கூட்டமைப்பு நாடுகளுக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. வர்த்தக ரீதியில் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகிறது. இந்த நிலையில் ஆசிய கண்டத்தில் சுதந்திர வர்த்தகக் கொடியை பறக்கவிடுவது கட்டாயமாகிறது'' என்றார். 

வீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

மறைந்த ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் ரகசிய வாழ்க்கை சீரியலாக நாளை முதல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. 

1947-ஆம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மர்லின் மன்றோ, தொடர்ந்து பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்தவர். நகைச்சுவை பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. 

கோல்டன் குளோப் விருது மற்றும் அனைத்து காலப்பகுதிக்குமான சிறந்த நடிகை என அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் பாராட்டும் பெற்றவர். நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குனர் என பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.  தன்னுடைய கடைசி நாட்களில் போதைக்கு அடிமையான இவர், 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டாலும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

வீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

திருட்டு என்றாலே அர்த்தம் தெரியாத கிராமம் 

ருமேனியாவின் பானட் மலைத் தொடர்களில் இருக்கும் அழகான எபின்தல் கிராமம். செக் இன மக்கள் வாழும் இந்த கிராமம் தான் உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாம். இங்கு எந்த குற்ற செயகும் நடப்பதில்லை. 

குறிப்பாக திருட்டுக் குற்றம் என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது. குற்றம் நடக்காததால் இந்த ஊரில் காவல் நிலையமே இல்லை.  கிராம மக்கள் தங்களது பணத்தை அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும், வீட்டி வேலி, சுவர், கம்பம் போன்றவற்றில் வைக்கப்படுகின்றன. எவ்வளவ பணமாக இருந்தாலும், யாரும் எடுக்க மாட்டார்களாம். 

சாப்பாடு விற்பவர்கள் வந்தால், விற்கும் பொருளை வைத்துவிட்டு, அதற்கான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை வைக்கின்றனர். 

வீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

ஆண்களிடம் அத்துமீறினால் தவறில்லையா? 

தென் கொரியத் தொலைக்காட்சியான எம்.பி.என்.னைச் சேர்ந்த ஜியோன் க்வாங்-ரியூல் எனும் செய்தியாளர் ஜூன் 28 அன்று ரஷ்யாவில் நேரலை ஒளிபரப்பு  செய்துகொண்டிருக்கும்போது 2 முறை ரஷ்ய பெண் ரசிகைகள் அவரை முத்தமிட்டனர். அந்த நிருபர் அந்த முத்த சம்பவத்தை சிரித்துக் கடக்க முயன்றார்.  ஆனால், தொலைக்காட்சி நேரலை செய்துகொண்டிருந்த பெண் நிருபர் ஒருவருக்கு முத்தம் தர முயன்ற சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளான சில தினங்களில்  இந்த சம்பவம் நடந்ததால் ஜியோனுக்கு ஏற்பட்ட நிகழ்வு பெரிதாக்கப்பட்டது. 

பெண் நிருபருக்கு முத்தமிட முயன்ற ஆண் ரசிகர்களின் செயல்கள் விமர்சிக்கப்பட்டதுபோல ஆண் நிருபருக்கு ரஷ்யப் பெண் ரசிகர்கள் முத்தமிட்டது ஏன்  விமர்சிக்கப்படவில்லை என்று சீனாவின் மிகப்பெரிய சமூக ஊடகமான வெய்போவில் விவாதம் நடந்தது. ''இது முந்தைய செய்திக்கு முற்றிலும் மாறான செய்தி''  என ஒரு பயனாளர் ஒருவர் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை முன்னிட்டு எதிர் முரணான கருத்துக்கள் எழுந்தன.
 
இந்த முத்த விவகாரம் சீனாவில் விவாதத்துக்கான பொருளாக இருந்தபோதிலும், தென் கொரியாவில் இந்த நிகழ்வு பெரிதாக கவனம் பெறவில்லை. எம்பிஎன் மற்றும் சில  ஊடகங்கள் மட்டுமே இந்த நிகழ்வு குறித்து பேசின. 

வீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP