வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்!

வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 61. வியட்நாம் அதிபராக தாய் குவாங் கடந்த 2016ல் பதவியேற்றார். முன்னதாக அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
 | 

வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்!

வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 61. 

வியட்நாம் நாட்டின் அதிபராக  தாய் குவாங் கடந்த 2016ம் ஆண்டு பதவியேற்றார்.  முன்னதாக அவர் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ராணுவத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வியட்நாம் நேரப்படி காலை 10.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP