வெனிசுவேலா: நிவாரணப் பொருட்களுக்கு தீ வைப்பு; கலவரத்தில் 5 பேர் பலி

வரலாறு காணாத பணவீக்கத்தால், வறுமையில் வாடும் வெனிசுவேலா மக்களுக்கு, அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களை அந்நாட்டு ராணுவம் தடுத்த நிலையில், இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
 | 

வெனிசுவேலா: நிவாரணப் பொருட்களுக்கு தீ வைப்பு; கலவரத்தில் 5 பேர் பலி

வரலாறு காணாத பணவீக்கத்தால், வறுமையில் வாடும் வெனிசுவேலா மக்களுக்கு, அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களை அந்நாட்டு ராணுவம் தடுத்ததால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுவேலா நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக கடும் பணவீக்கம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல், வறுமையில் வாடி வருகின்றனர். வரலாறு காணாத வறுமையில் பொதுமக்கள் தவித்து வரும் நிலையில், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மடுரோ, அதற்கான போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சியை சேர்ந்த ஹுவான் குவைடோ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். வெனிசுவேலா மக்களுக்கு அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவில் இருந்து நிவாரணப் பொருட்களை லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அந்த நிவாரண பொருட்களை வழங்குவது தனது ஆட்சியை கவிழ்க்க நடத்தப்படும் சதி என அதிபர் மடுரோ குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் குவைடோ, நிவாரண பொருட்கள் நாட்டு மக்களை சேர நேற்று வரை கெடு விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று 5 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் எல்லையை கடக்க முயன்றபோது வெனிசுவேலா ராணுவத்தினர் அதை தடுத்தனர். இதனால் கலவரம் ஏற்பட்டது.  பொதுமக்கள் நிவாரணப் பொருட்களை எடுக்க செல்ல, ராணுவத்தினர் ரப்பர் குண்டு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். நிவாரண பொருட்கள் கொண்ட செல்லப்பட்ட இரண்டு லாரிகளுக்கு ராணுவம் தீ வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, கொலம்பியா நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக வெனிசுவேலா அதிபர் மடுரோ தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP