ஆபாசப்படம் பார்த்த வாடிகன் தூதருக்கு 5 ஆண்டு சிறை!

வாட்டிகன் அரண்மனையை சேர்ந்த முன்னாள் அமெரிக்க தூதருக்கு சிறார்களின் பாலியல் படம் பார்த்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பட்டுள்ளது.
 | 

ஆபாசப்படம் பார்த்த வாடிகன் தூதருக்கு 5 ஆண்டு சிறை!

பாலியல் படம் பார்த்த அமெரிக்காவுக்கான வாடிகன் தூதராக பணியாற்றிய பாதிரியாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து வாடிகன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடம் ரோம் நகரில் வாடிகனில் உள்ளது. அது ஒரு தனி நாடாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிகன் நாட்டுக்கான தூதரகங்கள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. வாடிகன் நாட்டின் தலைவராக போப் பிரான்சிஸ் இருக்கிறார்.

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள வாட்டிகன் தூதரகத்தின் தலைமை தூதராக பணியாற்றிய பாதிரியர் கார்லோ ஆல்பெர்டோ கபெல்லா மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட, சிறார்களை வைத்து உருவாக்கப்பட்ட பாலியல் படங்களை அவர் பார்த்து ரசித்து வந்தது அம்பலமானது. இதைத் தொடர்ந்து தூதர் பணியில் இருந்து அவர் பதவி நீக்கப்பட்டு. வாட்டிகனுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அவர் மீது வாட்டிகன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது, மன அழுத்தத்தின் காரணமாக இதைப்போன்ற படங்களை பார்ப்பதை பழகிகொண்டதாக அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. ஆனால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த கார்லோ ஆல்பெர்டோ கபெல்லாவை வாட்டிகன் அரண்மனை வளாகத்தில் உள்ள சிறிய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இதுபோல் சுமார் 30 அதிகாரிகள் வாட்டிகன் நீதிமன்றத்தில் பாலியல் ரீதியான வழக்குகளை சந்தித்து வருகின்றனர். ஆனால், முதல் முறையாக இப்போதுதான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்றுள்ள பாதிரியார் கர்லோ ஆல்பெர்டோ இந்தியா,  ஹாங்காங் என பல நாடுகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP