சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 60 அல் ஷாபாபினர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகர் மொகடிஷுயில் பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து ஆப்பிரிக்க படைகளுடன் அமெரிக்கா ராணுவம் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் அல் ஷபாப் இயக்கத்தினர் 60 பேர் கொல்லப்பட்டதாக பெண்டகன் கூறியுள்ளது.
 | 

சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 60 அல் ஷாபாபினர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகர் மொகடிஷுயில் பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து ஆப்பிரிக்க படைகளுடன் அமெரிக்கா ராணுவம் இணைந்து திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த சுமார 60 பேர் கொல்லப்பட்டதாக பெண்டகன் அறிக்கை கூறுகிறது. 

அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதக் குழுவான அல் ஷபாப் சோமாலியாவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகேயுள்ள அந்த இயக்க பயங்கரவாதிகள் முகாம் மீது நேற்று சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. 

இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தத் தாக்குதல் கடந்த ஒரு ஆண்டில் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் நடத்தப்பட்டதாக அமெரிக்க - ஆப்பிரிக்க கூட்டுப்படை கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இந்த வான் தாக்குதலின் மூலம்  அல் ஷபாப் இயக்கத்தின் வருங்கால சதித் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பகுதியில் அவர்களது ஆதிக்க வேர் அறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2017ல் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இதே போலான வான்தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அமெரிக்க படைகளின் தாக்குதலை நிறுத்த ட்ரம்ப் அரசு உத்தரவிட்டிருந்தது. பின்னர் சமீபத்தில் அவை திருமப் பெறப்பட்டுள்ளன. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP