சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்: அமெரிக்கப் படையினர் 4 பேர் பலி

வடக்கு சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவப்படையைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக, அதே பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட 30 பேர் பலியாகினது குறிப்பிடத்தக்கது.
 | 

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்: அமெரிக்கப் படையினர் 4 பேர் பலி

வடக்கு சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவப்படையைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். 

வடக்கு சிரியாவில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க சிரியப் படைகளுக்கு அமெரிக்கப் படையினர் உதவி வருகின்றனர். இரு நாட்டு படைகளும் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகள் வசம் இருந்த பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இதனால் தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், இன்று அலெப்போ மாகாணத்தில் மன்பிஜ் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க படையை சேர்ந்த நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதில் 2 வீரர்கள், பாதுகாப்புப்படையில் பணியாற்றும் ஊழியர் மற்றும் மிலிட்டரி காண்ட்ராக்டர் என 4 பேர் பலியாகி உள்ளனர்.

முன்னதாக, அதே பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட 30 பேர் பலியாகினது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP