ஐ.நா. துணை அமைப்பு தேர்தல்: இந்த ஆண்டும் இந்தியா வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக, இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது. இதற்காக நடந்த 6 தேர்தலிலும் இந்தியா வெற்றி பெற்றது.
 | 

ஐ.நா. துணை அமைப்பு தேர்தல்: இந்த ஆண்டும் இந்தியா வெற்றி

ஐ.நா. துணை அமைப்பு தேர்தல்: இந்த ஆண்டும் இந்தியா வெற்றிஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக, இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது. இதற்காக நடந்த 6 தேர்தலிலும் இந்தியா வெற்றி பெற்றது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், இந்தியா - 46, பாகிஸ்தான் - 43, பஹ்ரைன் - 40, சீனா - 39, ஈரான் - 27 வாக்குகள் பெற்றன. இதையடுத்து, இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த முறையும், இந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஐ.நா-வுக்காம இந்தியாவின் நிரந்தர துாதர், சையது அக்பருதீன் கூறும்ப்போது, ''இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்துள்ள வெற்றி, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி'' என்றார்.

ஐ.நா., சபையின் ஆறு கவுன்சில்களில் ஒன்றான பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் மிக முக்கியமானதாகும். பொருளாதாரம், சமூகம் குறித்து விவாதிக்கவும், சர்வதேச அளவில் கொள்கைகளை வகுக்கவும், இந்தக் கவுன்சிலே பரிந்துரை செய்யும். தற்போது தேர்வாகியுள்ள நாடுகளின் பதவிக் காலம் வரும் ஜனவரி தொடங்கி 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP