ஆசிரியருடன் குத்தாட்டம் போட்ட இங்கிலாந்து செயலாளர்!

பெரு நாட்டுக்குச் சென்றுள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ், ஆட்டம் பாட்டம் கொண்டாடிய வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
 | 

ஆசிரியருடன் குத்தாட்டம் போட்ட இங்கிலாந்து செயலாளர்!

ஆசிரியருடன் குத்தாட்டம் போட்ட இங்கிலாந்து செயலாளர்!பெரு நாட்டுக்குச் சென்றுள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ், ஆட்டம் பாட்டம் கொண்டாடிய வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது. 

இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் பெரு நாட்டிற்குச் சென்றுள்ளார்.  கடந்த 50 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ள முதல் வெளியுறவுத்துறை செயலாளர் என்ற பெருமையைப் பெற்ற அவர் அருங்காட்சியகத்தில் உள்ள கடல் பசு உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவளித்து மகிழ்ந்தார். 

ஸ்பைடர் குரங்குகளுடன் பொழுதைக் கழித்த போரிஸ் ஜான்சன், ஸ்லாத் போன்ற உயிரினங்களையும் கொஞ்சி ரசித்தார். பின்னர் அமேசான் நதியில் அதிவேகப் படகில் பயணித்தார். அதோடு, பள்ளி ஒன்றுக்குச் சென்ற அவர், அங்கிருந்த ஆசிரியை மற்றும் மாணவர்களுடன் பாட்டுப்பாடி உள்ளூர் நடத்தில் ஒரு குத்தாட்டம் போட்டார். இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளன. இதனை இங்கிலாந்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்து அவர் சகஜமாக பழகுவதை பாராட்டியுள்ளன. 


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP