உகாண்டா நிலச்சரிவு: பள்ளி மண்ணில் புதைந்து 200 பேர் மாயம்; 36 பேர் பலி 

உகாண்டாவின் தெற்கில் அமைந்துள்ள மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 36 பேர் பலியாகினர். 3 கிராமங்களைச் சேர்ந்த 400 பேர் மாயமானதாக கணக்கிடப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.
 | 

உகாண்டா நிலச்சரிவு: பள்ளி மண்ணில் புதைந்து 200 பேர் மாயம்; 36 பேர் பலி 

உகாண்டாவின் தெற்கில் அமைந்துள்ள மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 36 பேர் பலியாகினர். 

உகாண்டாவில் உள்ள தெற்கில் அமைந்துள்ள மவுண்ட் எல்கோன் மாகாணத்தின் படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் பல கிராமங்கள் உள்ளன. கனமழை பெய்து வரும் அங்கு திடீரென நேற்று நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் அங்குள்ள 3 கிராமங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. பெரும்பாலான வீடுகல் மண்ணில் புதையுண்டதில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட கூறப்படுகிறது. 

உள்ளூர் டிவி சானல்கள், பலி எண்ணிக்கை 40க்கும் மேல் என குறிப்பிடுகின்றன. மேலும், பள்ளியின் ஒரு பகுதி மண்ணில் புதையுண்டதில் 200 பேர் மாயமானதாக தகவல் தெரியவந்துள்ளது.  மற்ற கிராமங்களையும் சேர்த்து 400 பேர் மாயமானதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் மழை தொடர்ந்து பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 கிராமத்தை சேர்ந்த காணாமல் போன மக்கள் இடிபாடுகளுக்குள் தேடப்பட்டு வருகின்றனர். 
அஞ்சப்படுகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP