கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளாவுக்கு, உலக நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், என தனிப்பட்ட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.700 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP