இந்தோனேசியாவில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கம்; 13 பேர் பலி!

இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் வரையில் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 460 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
 | 

இந்தோனேசியாவில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கம்; 13 பேர் பலி!

இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் வரையில் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியா லாம்போக் தீவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று இரவு லாம்போக் தீவின் அருகே உள்ள மற்றொரு தீவான சும்பாவாவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.இரண்டாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் வரையில் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால், மக்கள் வீடுகளை இழந்து சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். எனினும் இது தொடர்பான பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவிலை.

முன்னதாக  கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 460 பேர் வரையில் உயிரிழந்த நிலையில், தற்போது ஏற்படும் அடுத்தடுத்த நிலநடுக்கத்தினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP