இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி!

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் கரகோட்டா எரிமலை கடந்த ஜூலையிலிருந்து தீக்குழம்பை கக்கி வந்த நிலையில், தற்போது இதன் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 43 பேர் பலியாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
 | 

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி!

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் கரகோட்டா எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது.
 
இந்தோனேஷியாவின் கரகோட்டா எரிமலை கடந்த ஜூலை மாதம் முதல் தீக்குழம்பை கக்கிவருகிறது. தற்போது இது மிக தீவிரமாகியுள்ளது. 
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள சுனாமியில் சிக்கி இதுவரை 43 பேர் பலியானதாக தெரிகிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் பாண்டேக்லாங், தெற்கு லாம்புங் மற்றும் ஷெராங் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அத்தோடு 600க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP