ஜெருசலேம் ரயில் நிலையத்துக்கு டிரம்ப் பெயர்... இஸ்ரேல் முடிவு

'மேற்க்குச்சுவர்' என்பது யூதர்கள் வழிபடும் புனித இடமாகும்.
 | 

ஜெருசலேம் ரயில் நிலையத்துக்கு டிரம்ப் பெயர்... இஸ்ரேல் முடிவு


பழைய ஜெருசலேம் நகரத்தில் யூதர்களின் புகழ்பெற்ற ஆலயம் அருகில் அமைய உள்ள ரயில் நிலையத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சூட்ட இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

கடந்த 6ம் தேதி ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர்  டிரம்ப் அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டன. மேலும், அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் வெற்றி பெற்றது. ஆனால், எங்களுடைய தூதரகம் எங்கு அமைக்க வேண்டும் என்பதைப் பற்றி மற்ற நாடுகள் ஆலோசனை கூற வேண்டாம் என்று தன்னுடைய முடிவில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த டிரம்பை கவுரவிக்க விரும்புவதாக இஸ்ரேலின் போக்குவரத்துத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

'மேற்கு சுவர்' என்பது யூதர்கள் வழிபடும் புனித இடமாகும். டெல் அவிவ் நகரிலிருந்து அதிவேக போக்குவரத்து விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேற்கு சுவர் பகுதிக்கு சுரங்கப்பாதை ரயில் திட்டத்தை இஸ்ரேல் அமைத்து வருகிறது. முஸ்லிம்களால் 'ஹரம் அல்-ஷெரீஃப்' என்றும் யூதர்களால் 'டெம்பில் மவுண்ட்' என்றும் அழைக்கப்படும் "மேற்கு சுவருக்கு" பின்னால் உள்ள மதிலை ஒட்டி சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு உள்ள நிலையில், அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ரயில் நிலையத்துக்குத்தான் டிரம்பின் பெயரை வைக்க இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து, அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், "இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்த அதிபர் டிரம்பின் தைரியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை அங்கீகரிக்கும் வகையில் புனித இடமான 'மேற்கு சுவருக்கு' அருகில் அமையவுள்ள ரயில் நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP