ட்ரம்பு, கிம் ஜோங் உன்னுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு'?

சர்வதேச அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரிய நாடுகளின் அணுஆயுத ஒழிப்பு கொள்கையை முன்வைத்து, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.
 | 

ட்ரம்பு, கிம் ஜோங் உன்னுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு'?

ட்ரம்பு, கிம் ஜோங் உன்னுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு'?

சர்வதேச அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரிய நாடுகளின் அணுஆயுத ஒழிப்பு கொள்கையை முன்வைத்து, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது. 

மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறித்த பலர், ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப்,  தாம் தமது வேலையைச் செய்ததாகக் கூறி, பொதுமக்களின் கோஷத்துக்கு கண் மூடி தலையசைத்தவாறு கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களுக்கு பின், நன்றியும் தெரிவித்தார். 

வடகொரியா - தென்கொரியா இடையே சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த பனிப்போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இதற்கான வேலைகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடயே நடந்து வருகின்றன. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திக்கிறார். 

இவர்களது சந்திப்பு சுமூகமாக முடிந்தால், கொரிய நாடுகள் இணக்கமாகி வருவதைப் போல அமெரிக்காவும் வட கொரியாவும் தோழமை நாடாக மாற வாய்ப்பு உருவாகும். இதனால் கொரிய தீபகற்பத்தில் அமைதியான சூழல் திரும்பும் எனவும் நம்பப்ப்படுகிறது. இவ்வாறு நடக்குமானால், அது சர்வதேச அளவில்,  ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங்கும் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக வெகு காலத்துக்கு போற்றப்படும். 

எனவே, இதுவரை நோபல் பரிசு பரிந்துரையில் இருக்கும், ஐ.நா. அகதிகள் காப்பாளர்கள், சவுதியில் உதவிபுரிந்த குழுக்கள், போப் போன்றோர் வரிசையில் டொனால்ட் ட்ரம்பும் கிம் ஜோங் உன்னும் சேருவர். இவர்கள் இதற்கு முன் எப்படி இருந்திருந்தாலும்.... இனி மேற்கொள்ளவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பே முடிவு செய்யும். 

இதுவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய அதிபர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அமெரிக்க அதிபர்கள் நிராகரித்து வந்தனர். வடகொரிய அதிபர்கள் நம்பகத்தன்மை மிக்கவர்கள் அல்ல என்பதே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அணு ஆயுதங்களை விட்டுவிடுவதாக கிம் ஜோங் கூறியுள்ளதை நம்பி இந்த சந்திப்பிற்கு ட்ரம்ப் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அதை நிறைவேற்ற, கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்க ராணுவம், கடற்படை முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை கிம் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  சந்திப்பு வெற்றி பெறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

ஆக்கம்: ப்ளூம்பெர்க்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP