வீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்

இந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 | 

வீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்

'விண்வெளி'யிலும் உசைன் போல்ட் தான் முதல்! 

பூமியில் ஓட்டப் பந்தையத்தில் முறியடிக்க முடியாத சாதனைகளை படைத்துவிட்டு ரிட்டையர் ஆன உசைன் போல்ட் 'விண்வெளி'யிலும் ஓடி முதலிடம் பிடித்து சாதித்துள்ளார். 

பொதுவான விண்வெளியில் பூஜ்ஜிய டிகிரி ஈர்ப்புவிசை இருக்கும் அதனால் தரையில் கால் படாது அனைத்து பொருட்களும் மிதந்து தான் இருக்கும். இந்த நிலையில் விண்வெளியில் இருப்பது போலான வடிமுறையை ஆராய்ச்சிக்காக இங்குள்ள விமானம் ஒன்றில் வல்லுனர்கள் ஏற்படுத்தினர். 

மதுபான வியாபாரி ஒருவர் தனது நிறுவன சாம்பைன் பாட்டிலை அறிமுகம் செய்ய அதனை புதிதாக 'விண்வெளி' போல வடிவமைக்கப்பட்ட விமானத்தில் அறிமுகம் செய்தார். சாம்பைன் பாட்டில் காற்றில் மிதக்கும் இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்ட உசைன் போல்ட்-ஐ அங்கிருந்து ஆய்வாளர்க ஓட்ட பந்தயத்தில் கலந்துகொள்ள வேடிக்கையாக கேட்டுக் கொண்டனர். 

விண்வெளியில் தங்க பயிற்சி பெற்ற விண்வெளி ஆய்வாளர்களுடன் ஓட்டப் பந்தயம் வைத்துக்கொள்ள உசைன் போல்ட் ஒத்துக்கொண்டார். ஆனால் அங்கு உசைன் தான் வெற்றி பெற்றார். பூமியில் சாதனை படைத்த ஜமாய்க்கா நாட்டு உசைன் போல்ட் 'விண்வெளி'யிலும் சாதித்துவிட்டார்.  

மேலே வீசிய அருவி! 

இங்கிலாந்து நாட்டில் ஹெலன் புயல் காரணமாக அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்த காணொளி பார்வையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார்க்சையர் பகுதியில் உள்ள மாலர்ஸ்டேங் முனையில் கம்ரியா என்ற அருவி பாய்ந்தோடுகிறது.அங்கு  மணிக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ஹெலன்  புயல் காற்றுக்கு அருவியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி அருவி சீறிப் பாய்ந்ததை கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐ.நா.வில் திரையிடப்படும் இந்திய சினிமா

பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட, 'லவ் சோனியா' என்ற திரைப் படம், அடுத்த மாதம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., அலுவலகத்தில் திரையிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் தப்ரேஸ் நுாரானி கூறியதாவது: வாங்கிய கடனை அடைப்பதற்காக, தந்தையால் விற்கப்பட்ட இந்திய கிராமத்து இளம் பெண், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதை மையமாக வைத்து, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்

சொதப்பிய விநாயகர் பிரச்சாரம் 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அதிபர் ட்ரம்பின் கட்சியை குடியரசுக் கட்சி நிர்வாகிகள் இந்திய வாக்காளர்களையும் இந்துக்களையும் கவரும் வகையில் பத்திரிகை விளம்பரம் ஒன்றை வெளியிட்டனர். ஆனால் அவர்கள் எண்ணியதற்கு மாறாக அந்த விளம்பரம் சொதப்பலாக ட்ரம்புக்கே சர்ச்சையாக கிளப்பியது. 

டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஃபோர்ட் பெண்ட் கவுண்டியை சேர்ந்த ஆளும் குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உள்ளூர் நாளிதழில் ஒரு பக்கத்திற்கு நான்கு கைகளை கொண்ட விநாயகரின் படத்தை வெளியிட்டிருந்தனர்.

அந்த விளம்பரத்தில், விநாயகரின் தலை முதல் கால் அருகே இருக்கும் எலி வரை ஒவ்வொரு பகுதிக்கும் காரண விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், படத்திற்கு கீழே, அமெரிக்காவிலுள்ள இந்துக்களை கேள்வி கேட்கும் வகையில் நீங்கள் ஒரு கழுதையை வணங்குவீர்களா? அல்லது யானையை வணங்குவீர்களா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. 

இந்த வாசகம்தான் கடும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. 

இதற்கு காரணம் குடியரசுக் கட்சியின் கொடியில் யானையின் உடலில் மூன்று நட்சத்திரங்கள் இருப்பதாக இருக்கும். தங்கள் கட்சியை பிரபலப்படுத்த விநாயகரை பயன்படுத்தி எதிர்மறை விளைவுகளை பெற்றது தான் மிச்சமானது. இதனையடுத்து, ஃபோர்ட் பெண்ட் கவுண்டி குடியரசு கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளனர். விநாயகர் சதூர்த்தியை கொண்டாடும் வகையிலே இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும் ஃபோர்ட் பெண்ட் கவுண்டி குடியரசு கட்சியின் கட்சியின் தலைவர் ஜேசி ஜேட்டன் மன்னிப்பு கோரியுள்ளார்.

வீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்

அமெரிக்காவில் தமிழுக்கு 5வது இடம்!

அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 5-வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க சமூக அமைப்பு  நடத்திய ஆய்வில் கூறி இருப்பதாவது:-  அமெரிக்காவின் மக்கள் தொகை 30. 5 கோடியில்  6.7 கோடி வேற்றுநாட்டு மொழிகளை பேசுகிறார்கள்.

அமெரிகாவில் இந்தி மிகவும் பரவலாக பேசப்படும் இந்திய மொழியாக உள்ளது. தொடர்ந்து குஜராத்தி, தெலுங்கு உள்ளது. 2010 மற்றும் 2017 ஆம் ஆணடி ஒப்பிடும் போது தெலுங்கு மொழி  பேசுவது 86 சதவீதம்  உயர்ந்து உள்ளது.  இந்தி மொழியை 8.63 லட்சம் பேரும்,குஜராத்தியை 4.34 லட்சம் பேரும், தொடர்ந்து தெலுங்கை 4.15 லட்சம் பேரும் பேசுகிறார்கள்.பெங்காலி மொழியை 2.23 லட்சம்பேர் பேசுகிறார்கள். 

அமெரிக்காவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் இந்திய மொழிகளில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி எது என்பதற்காக நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 8 லட்சத்து 63 ஆயிரம் பேரால் பேசப்படுவதால் இந்தி முதலிடத்திலும், 4 லட்சத்து 34 ஆயிரம் பேரால் பேசப்படுவதால் குஜராத்தி இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், தமிழ் மொழி 5-வது இடத்தில் உள்ளது. 
அமெரிக்காவில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவிதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வீக்லி நியூஸுலகம்: விநாயகரையும் விட்டுவைக்காத ட்ரம்ப் மற்றும் விண்வெளி சாதனையாளர் உசைன் போல்ட்


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP