துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

துருக்கியில் பயணிகள் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர்.
 | 

துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

துருக்கியில் பயணிகள் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

துருக்கியின் கபிகுலே பகுதியிலிருந்து க்ரீஸ் நாட்டின் இஸ்தான்புல் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததனர். இதையடுத்து தற்போது பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இந்த ரயிலில் 360 பயணித்துள்ளனர். 318 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

துருக்கியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக ஒரு சில பகுதிகளில் ஏற்கனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மண் சரிவு, பாறைகள் விழுந்ததனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP