இன்று உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் சனிக்கிழமை (மார்ச் 23) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு சூரியன், பூமி மற்றும் வானிலை எனும் கருப்பொருள் மையமாக வைக்கப்பட்டுள்ளது.
 | 

இன்று உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் சனிக்கிழமை (மார்ச் 23) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு சூரியன், பூமி மற்றும் வானிலை எனும் கருப்பொருள் மையமாக வைக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு நாட்டின் வானிலை துறையின் அடிப்படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும். இதன் மூலம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது முக்கியமானதாகும். அந்த விருப்பத்தை நோக்கி செயல்பட எல்லா நாட்டின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

ஒரு நாட்டின் வானிலையை கணிப்பதற்கு அந்த நாட்டை தவிர மற்ற பகுதிகளில் இருக்கின்ற விவரங்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், ஒருபகுதியில் உள்ள வானிலை நிகழ்வு மற்றொரு பகுதிகளை பாதிக்கக்கூடிய நிலை உள்ளது. 

எல்லா நாடுகளுக்கும் இடையே வானிலை தொடர்பான அறிவு, அது சம்பந்தமாக தொழில்நுட்பம், ஆதாரத்தை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு, அதன்மூலமாக வானிலை விவரங்களை வளர்த்து கொள்ள உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. 

அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து உலக வானிலை அமைப்பு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் 1950-ஆம் ஆண்டு 23-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ஆம் தேதி உலக வானிலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP