ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மூன்று சகோதர்கள் !

மூவரும் தங்களுக்கு சொந்தமான சொத்தை ரூ .1.25 கோடிக்கு விற்றுவிட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு ரூ .12 லட்சம் மட்டுமே கொடுத்ததாகவும் .
 | 

ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மூன்று சகோதர்கள் !

லூதியானாவின் உள்ள இஷார் நகரில் உடல் நலம் குன்றிய தந்தையுடன் மல்கித் சிங் (40), குல்தீப் சிங் (38), சன்னி (36) ஆகிய மூன்று சகோதரர்களும் வசித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளாத இம்மூவரும் படுக்கையில் இருந்த தங்களுடைய தந்தையை கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து  தன்னுடைய மூன்று மகன்களையும் தொடர்பு கொள்ள இயலாததால் படுக்கையில் இருந்த அவர்களது தந்தை ஊர்ந்து சென்று அவர்கள் தங்கிருந்த அறையில் பார்த்துள்ளார். அப்போது அவரின் மகன்கள் மூவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக தொங்கியுள்ளனர்.

பின்னர் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த மூவரின் உடல்களையும் மீட்டி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் அந்த வீட்டை சோதனையிட்டதில் 8 பக்கங்கள் கொண்ட  கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இவர்கள் மூவரும் தங்களுக்கு சொந்தமான சொத்தை ரூ .1.25 கோடிக்கு விற்றுவிட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு ரூ .12 லட்சம் மட்டுமே கொடுத்ததாகவும் . மீதி பணத்தை கொடுக்காமல் தங்களை இருவர் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP