கசோகியை கொன்றவர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளனர்- அதிர்ச்சி தகவல்

பத்திரிகையாளர் கசோகி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரை கொலை செய்தவர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
 | 

கசோகியை கொன்றவர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளனர்- அதிர்ச்சி தகவல்

பத்திரிகையாளர் கசோகி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரை கொலை செய்தவர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் , நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராகப் பணியாற்றியவர் ஜமால் கசோகி. இவர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். 

சவுதி அரசையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவுதி அரசு திட்டமிட்டு இருந்தது. துருக்கி நாட்டை சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஹெயிஸ் செங்குஸை திருமணம் செய்ய ஜமால் முடிவு செய்து, தொடர்ந்து துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு விவாகரத்து வாங்கியது தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி சென்றுள்ளார். இவரை மீண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி தூதரகத்துக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். சவுதி தூதரகத்துக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இவரை கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பாகச் செல்பவர்கள் தான் இந்த சிறப்பு குழு. 

ஜமாலை சித்ரவதைச் செய்து கொன்ற பின்னர், உடற்கூறு ஆய்வு நிபுணர் அவரின் உடலை 15 பகுதிகளாக வெட்டியுள்ளனர். இந்த 15 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP