பிளாஸ்டிக் உபயோகத்துக்கு தடை விதித்த முதல் தீவிரவாத இயக்கம் இது தான்!

சோமாலியாவிலிருந்து செயல்படும் அல்- ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் தான், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடைவிதித்துள்ளது.
 | 

பிளாஸ்டிக் உபயோகத்துக்கு தடை விதித்த முதல் தீவிரவாத இயக்கம் இது தான்!

சோமாலியாவிலிருந்து செயல்படும் அல்- ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் தான், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்கு தடைவிதித்துள்ளது.   

சோமாலியாவிலிருந்து செயல்பட்டு வரும் அல்- ஷபாப் தீவிரவாத இயக்கம் அல்- காய்தாவின் கிளை அமைப்பாகும். கடந்த ஆண்டு சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் டன் கணக்கில் வெடிப்பொருட்களை ஏற்றி வந்து வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியதில் 500 க்கும் மேலானோர் பலியானதை நினைவுகூர்ந்தால் அல்- ஷபாப் இயக்கத்தை நிச்சயம் நினைவில்கொள்ளலாம். 

இந்த நிலையில், இந்த இயக்கத்தின் வானொலியான ரேடியோ அன்டாளுஸ், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறிவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தங்களது ஜிகாதிக் குழுவில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தகைய தடைவிதிப்பை விடுத்து, இந்தக் குழு தங்களாலும் ஆட்சி அதிகாரம் செய்ய முடியும் என்று மக்களிடம் நிரூபிக்க இவ்வாறு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

அதிகாரபூர்வமக இத்தகைய அறிவிப்பு விடுத்திருக்கும் முதல் தீவிரவாத இயக்கம் அல்-ஷபாப் தான். 

அல்- ஷபாப் இயக்கத்தின் ஆளுநாராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் முகமது அபு அப்தலா இது குறித்து கூறும்போது, "இந்தத் தடை உத்தரவு எந்தவகையில் கடைபிடிக்கப்படும் என்று விரைவில் தெரிவிக்கப்படும். எங்காளாலும் எதையும் கடைபிடித்து ஆட்சியாளர்களை போல சட்ட விதிமுறைகளை மதிக்க முடியும் என்பதை மக்களிடம் உணர்த்தவே இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம்" என்றார். 

தீவிரவாத இயக்கங்கள் இத்தகைய தடைகளை விதிப்பது முதன்முறை அல்ல. அல்- காய்தா மற்றும் அதன் கிளை இயக்கங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகள் சிலவற்றை ஏற்கெனவே அறிவித்து பின்பற்றியுள்ளன. அல்- ஷபாப் இயக்கம் கூட முன்னதாக, தங்களது இயக்கத்துக்கு நிதி சேகரிக்கும் நோக்கத்தோடு யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை விற்பதில்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP