உலகின் மிக வயதான ஓராங்குட்டான் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தது

உலகிலேயே மிகவும் வயதான பெண் சுமத்ரான் ஓராங்குட்டான் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலுள்ள மிருகக்காட்சியகத்தில் உள்ளது.
 | 

உலகின் மிக வயதான ஓராங்குட்டான் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தது

உலகிலேயே மிகவும் வயதான பெண் சுமத்ரான் ஓராங்குட்டான் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலுள்ள மிருகக்காட்சியகத்தில் உள்ளது.

62 வயதான புவான் என்று அழைக்கப்படும் ஓராங்குட்டான் நீண்ட காலமாகவே வயது சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டது. இந்த நிலையில் இயற்கையாக அந்த ஓராங்குட்டான் திங்கட்கிழமையன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1968-ம் ஆண்டு முதல் இந்த மிருகக்காட்சி சாலையில் இருக்கும் புவான், கடந்த 2016-ல், இந்த வகை ஓராங்குட்டான்களில் மிகவும் வயதானதாக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.  அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக ஓராங்குட்டான்கள் குரங்கினம் இருக்கிறது. காட்டு வாழ்க்கையிலேயே இருந்தாலும், இது 50 வயதுக்கு மேல் வாழும் வகை என பெர்த் மிருகக்காட்சியாகம் தெரிவித்துள்ளது.

உலகின் மிக வயதான ஓராங்குட்டான் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தது

1956-ம் ஆண்டு இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் பிறந்ததாக நம்பப்படும் இந்த ஓராங்குட்டான் 11 குட்டிகள் ஈன்றது. அவற்றின் மூலம் 54 வழித்தோன்றல்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல இடங்களில் அவை வாழ்ந்து வருவதாக மிருகக்காட்சியாகம் தெரிவித்துள்ளது. புவான் ஒராங்குட்டான் அதிகம் தனிமை விரும்பியாகவும் சுயாதீனமாகவும் வாழ்ந்து வந்ததாக மிருகக்காட்சியாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகம் முழுவதும் சுமார் 14,600 ஓராங்குட்டான்கள்தான் உள்ளன. இதில் 54 வழித்தோன்றல்கள் புவான் ஓராங்குட்டானுடையது என்பது இதன் பெருமை. 

இதற்கு 11 குட்டிகள் மூலம் 54 வழித்தோன்றல்கள் உலகம் முழுவதுமுள்ளது.  உலகளவில் விலங்கினங்களின் தொகைப்படி ஓராங்குட்டான்கள் வெறும் 10 சதவீதம் தான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP