புல்வாமா தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: பாகிஸ்தான்

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

புல்வாமா தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: பாகிஸ்தான்

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று மாலை 78 வாகனங்களில் 2,000 க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகளின் கோழைத்தனமான இந்த தூக்குதலுக்கு ஐ.நா.சபையைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் உள்பட கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் சீனாவும், பாகிஸ்தானும் எதுவுமே தெரிவிக்கவில்லை. 

புல்வாமா கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது பாகிஸ்தானை மையமாக கொண்ட தீவிரவாத அமைப்பாகும். எனவே இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் சம்மந்தம் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்நிலையில் பாகிஸ்தான் தற்போது பதில் அளித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், " காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் வருத்தத்திற்குரியது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் எப்போதும் அனுமதிப்பதில்லை. எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் வன்முறையை கடுமையாக கண்டிக்கும். அந்த வகையில், எந்த விசாரணையும் இல்லாமல் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பழி சுமத்துவது நியாயமாகாது.  புல்வாமா தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே இந்தியா மற்றும் இந்திய ஊடகங்களின் கருத்துக்களை நாங்கள் புறக்கணிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பாகிஸ்தானை மையமாக கொண்ட தீவிரவாத இயக்கம் தான் என்பதை இந்திய அரசு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP