இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு இல்லை... ஏன் தெரியுமா?

இலக்கியத்துக்கான நோபல் பரிசை முடிவு செய்யும் 'ஸ்வீடிஷ் அகாடமி' பாலியல் அத்துமீறல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளதால் இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட போவதில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு இல்லை... ஏன் தெரியுமா?

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு இல்லை... ஏன் தெரியுமா?இலக்கியத்துக்கான நோபல் பரிசை முடிவு செய்யும் 'ஸ்வீடிஷ் அகாடமி' பாலியல் அத்துமீறல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளதால் இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகிறது . 

இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குரியவரை 'ஸ்வீடிஷ் அகாடமி' தேர்ந்தெடுக்கும். இம்முறை அகாடமியில் இருப்பவர்கள் மீது பாலியல் அத்துமீறல், நிதிமுறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதையடுத்து 2018-ஆம் ஆண்டுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குரியவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு இல்லை... ஏன் தெரியுமா?

இந்த நிலையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஸ்வீடிஷ் அகாடமியின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடஷ் அகாடமியின் நிரந்தர செயலாளர் ஆன்டர்ஸ் ஆல்ஸன் வெளியிட்ட அறிவிப்பில், "நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகாடமியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் தற்போது நிலவும் சிக்கல், பிரச்னைகள் குறித்து அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். நீண்டகால நோக்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

புதிய நோபல் பரிசபெறுபவர்களை அறிவிக்கும் முன் மக்களிடம் இழந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்பது மிகவும் அவசியம். பொதுமக்களின், நோபல் அறக்கட்டளையின், எதிர்கால பரிசு பெறுபவர்கள், கடந்த காலத்தில் பரிசு பெற்றவர்கள் ஆகியோரின் மரியாதையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது." என்று அதில் கூறப்பத்துள்ளது. 

நோபல் பரிசு வழங்காமல் போன வரலாறு....

நோபல் பரிசு வழங்கத் தொடங்கியதிலிருந்து பாலியல், நிதிமோசடி, நம்பிக்கையின்மை  போன்ற காரணங்களால் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை. ஆனால், முதலாம், 2-ம் உலகப்போரின் போது பரிசுகள் வழங்குவது நிறத்தப்பட்டுள்ளது.

1914, 1918, 1935, 1940, 1941, 1942, மற்றும் 1943 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP