பத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்

அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றபோது மாயமானார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
 | 

பத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் உலக நாடுகள் மத்தியில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா வாஷிங்டன் போஸ்ட் இதழில் கட்டுரைகள் எழுதி வரும் பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கி நாட்டைச் சேர்ந்த தனது தோழியை திருமணம் செய்ய, ஆவணங்கள் பெறும் பொருட்டு,  துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றார். கடந்த 2ம் தேதி சென்ற நிலையில் அவர் மாயமானார். சவுதி அரச குடும்பத்துக்கு எதிராக எழுதி வந்த அவரை, சவுதி அதிகாரிகள் சேர்ந்து தூதரகத்திலேயே வைத்து சித்தரவதை செய்து, கொலை செய்ததாகவும், அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தில் கரைத்ததாகவும் கூறப்பட்டது.

பத்திரிக்கையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்: துருக்கி அதிபர்

உலக நாடுகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதன் விளைவாக, துருக்கி அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி 18 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சவுதி அரசு இதுகுறித்து சமீபத்தில் பதிலளித்தது. அதாவது, தூதரகத்துக்குள் நடந்த ஒரு கைகலப்பில் பத்திரிக்கையாளர் கஷோகி உயிரிழந்தார் என விளக்கம் அளித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன், உண்மையை தெரிவிக்க இருப்பதாக நேற்று கூறியிருந்தார். அதன்படி, இன்று அவர், 'சவுதி அரசு திட்டமிட்டபடி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்துள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார். துருக்கி அதிபரின் இந்த குற்றச்சாட்டையடுத்து மேலும் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. 

மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்கா, சவுதி நாடுகளுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சவுதியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் சூழ்நிலையில் அமெரிக்கா உள்ளது. மேலும் சவுதியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டுமெனவும் மற்ற நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்றன. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயுள்ள நட்புறவில் விரிசல் ஏற்படலாம் என உலக நாடுகள் மத்தியில் பேசப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP