விமான பயணத்தில் போப் ஆண்டவர் செய்து வைத்த முதல் திருமணம்!

விமான பயணத்தில் போப் ஆண்டவர் செய்து வைத்த முதல் திருமணம்!
 | 

விமான பயணத்தில் போப் ஆண்டவர் செய்து வைத்த முதல் திருமணம்!


சிலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், விமானத்தில் வைத்து ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் சாண்டியாகோவில் இருந்து ஐகியுகியூ நகருக்கு தனது விமானத்தில் சென்றார். அப்போது போப் ஆண்டவரின் விமானத்தில் பணிபுரியும் கார்லோஸ், சியூப்பார்டி (41), பயுலா போடெஸ்ட் (39) ஜோடியின் திருமணத்தை போப் செய்து வைத்துள்ளார்.

சிலி நாட்டை சேர்ந்த இவர்களுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் உள்ளூர் தேவாலயம் ஒன்று நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதால், மதமுறைப்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில், சான்டியாகோவில் இருந்து வட பகுதியில் இருக்கும் ஐகியுகியூ நகருக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்கையில், போப் பிரான்சிஸ் குறுகிய மத சடங்கை நிறைவேற்றி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி இந்த திருமணத்திற்கு சாட்சியாக இருந்தார். விமானத்தில் வைத்து போப் ஒருவர் நடத்தி வைத்த முதல் திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP