ஃபனி புயல் குறித்த துல்லிய கணிப்பு வியக்க வைக்கிறது: இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு!

ஃபனி புயலின் போது ஒரிசாவில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு தெரிவித்துள்ளது.
 | 

ஃபனி புயல் குறித்த துல்லிய கணிப்பு வியக்க வைக்கிறது: இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு!

ஃபனி புயலின் போது, ஒரிசாவில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவான அதி தீவிர புயலான ஃபனி புயல், நேற்று ஒரிசாவில் புரி பகுதியில் கரையை கடந்தது. புயலின் தாக்கத்தினால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 200 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதனால் அங்கு பெரும்பாலான இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், போக்குவரத்து, மின்சேவை, தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. 

ஆனால், புயல் வருவதற்கு முன்னதாகவே, இந்திய வானிலை மையம் தொடர்ந்து, புயலின் நிலைமை குறித்து தகவல் வெளியிட்டு வந்தது. ஒடிசாவில் கடுமையான பாதிப்பு  இருக்கும் என்று ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுத்தது. 

ஃபனி புயல் குறித்த துல்லிய கணிப்பு வியக்க வைக்கிறது: இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு!

அதன்படி, மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தன. கடலோரப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதற்காக சுமார் 900 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு புயலுக்கு பின்னர், மீட்புப்பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதிகபட்சமாக, புயலினால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபனி புயல் குறித்த துல்லிய கணிப்பு வியக்க வைக்கிறது: இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு!

அதே நேரத்தில் 1999ம் ஆண்டு இங்கு ஏற்றப்பட்ட புயலில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாக தகவல் உள்ளது. அதிலும் ஃபனி புயல், அதி தீவிர புயல் என்பதால், ஒருவேளை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்திருந்தால், இந்தியா இதுவரை கண்டிராத பெருமளவு உயிர்சேதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

மத்திய, மாநில அரசுகளின் இந்த துல்லியமான பாதுகாப்பு நடவடிக்கைகள், தற்போது உலக அளவில் பேசப்படுகின்றன.  சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறுகிய கால அவகாசத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு தெரிவித்துள்ளது. 

ஃபனி புயல் குறித்த துல்லிய கணிப்பு வியக்க வைக்கிறது: இந்தியாவிற்கு ஐ.நா பாராட்டு!

ஐ.நாவின் பேரழிவு ஆபத்து தடுப்பு அமைப்பின்(UN Office for Disaster Risk Reduction) செய்தித் தொடர்பாளர் டெனிஸ் மேக்ளீன்(Denis McClean) என்பவர், "ஃபனி புயல் குறித்து இந்திய வானிலை மையம் மிக துல்லியமாக தொடர்ந்து கணக்கிட்டுள்ளது. அதன்படி, இந்திய அரசு, மிகச்சரியாக திட்டமிட்டு பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியுள்ளது. புயல் வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் சொற்ப அளவிலே உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு அதி தீவிர புயலை சிறப்பாக எதிர்கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP