கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது: பரபரப்பான தீர்ப்பு

தென்கொரியாவில் நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
 | 

தென்கொரியாவில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. அங்கு 1953-ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி தடையை மீறி கருக் கலைப்பு செய்யும் பெண்களுக்கு ஓராண்டு சிறையும், கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் தண்டனையாக வழங்கப்படுகிறது. 

கருக்கலைப்பு தடைச்சட்டம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கருக் கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரியா அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வரும் 2020ஆம்  இறுதிக்குள் இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்தச் சட்டம் செயலற்றதாகும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெண்ணுரிமை ஆர்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP