தாய்லாந்து- மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்!

தாய்நாந்து நாட்டில் மண்ணில் புதைக்கப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.
 | 

தாய்லாந்து- மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்!

தாய்நாந்து நாட்டில் மண்ணில் புதைக்கப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள சும்பாங் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய இளம் பெண் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள மண்ணில் உயிருடன் புதைத்து விட்டார்.

இந்நிலையில் இதை அங்குள்ள பிங்பாங் என்னும் பெயருடைய நாய் ஒன்று பார்த்து விட்டது. உடனடியாக அது சம்பவ இடத்திற்கு ஓடி சென்று மண்ணை கடகடவென தோண்டியது. குழந்தையின் உடல் வெளியே தெரிந்தவுடன், அந்த நாய் பயங்கரமாக குரைக்க தொடங்கியது.

இதை பார்த்த நாயின் உரிமையாளர் ஓடி வந்து பார்த்த போது குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசாரின் விசாரணையில் குழந்தை பெற்ற பெண் தனக்கு 15 வயது மட்டுமே ஆவதால் பெற்றோருக்கு பயந்து குழந்தையை புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை காப்பாற்றிய நாயை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP