ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள், அங்குள்ள உள்ளூர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 | 

ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள், அங்குள்ள உள்ளூர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் எனும் நகரில் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நேற்றிரவு இங்கு பயங்கரவாதிகள் 3 பேர் உள்ளே புகுந்தனர். அங்குள்ளவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் சிலரை தாக்கியும் உள்ளனர். 

இதற்கிடையே, தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் போலீசார், பயங்கரவாதிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP