ஆப்கானிஸ்தானில் 3438 பொது மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள்

கடந்த ஓராண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 | 

ஆப்கானிஸ்தானில் 3438 பொது மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள்

கடந்த ஓராண்டில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்து வந்தனர். உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு, ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கத் தாக்குதல் நடத்தியது. இதில், தலிபான்கள் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டது. அது முதல், தலிபான்கள் பயங்கர வெடிகுண்டு தாக்குதலை அப்பாவி பொது மக்கள் மீது நிகழ்த்தி பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலிவாங்கி வருகின்றனர். 

கடந்த ஆண்டு மட்டும், மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஏழு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும்... இது. அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 9 சதவிகிதம் குறைவு என்றும் ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் மீது அமெரிக்க மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலடியாக, தலிபான்கள் தக்குதல் நடத்தி வருகின்றனர். 

2009ம் ஆண்டுக்குப் பிறகு 28 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP