மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - அமைதிப்படை வீரர்கள் 10 பேர் பலி

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
 | 

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - அமைதிப்படை வீரர்கள் 10 பேர் பலி

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியை 2012-ம் ஆண்டு மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அவர்களை 2013-ம் ஆண்டு பிரெஞ்சு படையினர் விரட்டியடித்தனர்.

ஆனாலும் மாலியில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்குள்ள பயங்கரவாத குழுவினர் பிரபல அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் தங்கியிருக்கும் இடங்களின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும் பொதுமக்களில் பலரை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்து, ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றனர்.

இதனால், மாலியில் பயங்கரவாதச் செயல்களை ஒழிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பிரசாரம் செய்வதற்காக ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு முகாமிட்டுள்ளனர். இதில் இந்தியா உட்பட பன்னாட்டுப் படைகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாலி நாட்டின் வடக்கு பகுதியில் அகுவெல்ஹோக் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது ஆயுதமேந்தி வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP