பயங்கரவாதம் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: பிரதமர் மோடி

பயங்கரவாதம் தான் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என பிரிக்ஸ் நாடுகளுடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

ஜி- 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஒசாகா நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

பயங்கரவாதம் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: பிரதமர் மோடி

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராம்போஸா ஆகியோருடன் உலக நாடுகளின் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டுமே உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதிலும் பயங்கரவாதம் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. 

பயங்கரவாதத்தினால் உயிர்ப்பலி ஏற்படுவதோடு, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம், சமூக அமைதியைக் கொடுக்கிறது. எனவே பயங்கரவாதத்திற்கு நாம் எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது. ஆதரவளிக்கும் நாடுகளும் அதனை உடனே நிறுத்த வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றி பெற முடியும். பயங்கரவாதம் என்பது பெரும் சவாலாக இருப்பதால் இந்த நேரத்தில் நாம் ஒன்றிணைந்து அவசியமாகிறது" என்று பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP