ஏமனில் கொடூரத்தாக்குதல்; 29 குழந்தைகள் உள்பட 50 பேர் பலி!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 29 குழந்தைகள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
 | 

ஏமனில் கொடூரத்தாக்குதல்; 29 குழந்தைகள் உள்பட 50 பேர் பலி!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 29 குழந்தைகள் உள்பட 50 பேர் வரையில் பலியாகியுள்ளனர். 

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியான சனா என்ற மாகாணம் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது. இந்த பகுதிகளை கைப்பற்றும் பொருட்டு, ஏமனுக்கு சவூதி படை உதவி வருகிறது. நேற்று சவூதி கூட்டுப்படைகள் தக்யான் நகரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு பள்ளி வேன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் உள்பட பொதுமக்களும்  பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 29 குழந்தைகள் உள்பட 50 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பாலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு சவூதி படைகள் மீது ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்ததோடு, விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. 'ஈவு இரக்கமற்ற கொடூரத்தாக்குதல்' என பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனத்தை முன்வைத்து வருகின்றன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP