தான்ஸானியா விபத்து: 2 நாட்களுக்கு பின் ஏர் பாக்கெட்டிலிருந்து ஒருவர் மீட்பு; பலி 200 ஆக அதிகரிப்பு

தான்ஸானியா நாட்டில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ள நிலையில் படகின் ஏர் பாக்கெட்திலிருந்து ஒருவர் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.
 | 

தான்ஸானியா விபத்து: 2 நாட்களுக்கு பின் ஏர் பாக்கெட்டிலிருந்து ஒருவர் மீட்பு; பலி 200 ஆக அதிகரிப்பு

தான்ஸானியா நாட்டில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ள நிலையில் படகின் ஏர் பாக்கெட்திலிருந்து ஒருவர் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளார். 

தான்ஸானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் சென்ற படகு ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பலி எண்ணிக்கை தற்போது 209ஆக உயர்ந்துள்ளது.

2 நாட்களுக்கு பின் ஒருவர் மீட்பு

இதனிடையே இந்த மோசமான விபத்து நடந்து ஒரு வாரமான நிலையில், படகின் ஏர் பாக்கெட் என அழக்கப்படும் அறையிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். 2 நாட்களுக்கு பின் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட அந்த நபர் படகின் மெக்கானிக் என தெரியாவந்துள்ளது. 

இந்நிலையில் இதோடு நீரில் மூழ்கியவர்களின் தேடுதல் பணி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 101 பேர் மட்டுமே ஏற்றக் கூடிய படகில், இத்தனை பேரை ஏன், எப்படி ஏற்றினார்கள் என்று தெரியவில்லை. இந்த விபத்தில் 40 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளோம் என்றனர். இந்த விபத்திற்கு யாரெல்லாம் காரணமோ, அவர்களைக் கைது செய்ய தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே முறையாக பயிற்சி பெறாத படகு ஓட்டுநர்களை அனுப்பி வைத்ததற்காக, படகின் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இது எங்கள் நாட்டின் மிகப்பெரிய பேரழிவு ஆகும். இதற்காக நாடு முழுவதும் 4 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றார். 

இந்த விபத்து குறித்து போப் பிரான்சிஸ், ஐ.நா சபை பொதுச் செயலர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஏராளமான ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக 1996ல் விக்டோரியா ஏரியில் எம்வி புகோபா சாங் கார்கோ பெர்ரி மூழ்கியதால் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து 2011ல் எம்வி ஸ்பைஸ் ஐலேண்டர் ஐ சாங் ஆப் விபத்தில் சிக்கியதில் 200 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP